counter create hit ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman

ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இதுவரை பியாற்சே கிராண்டே திரையரங்கில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமான இருவர் Roger Corman மற்றும் Hervey Keitel. 

 இந்தவருடத்தின் Filmakers Academy இன் «சிறப்பு விருந்தினர் விருது» Roger Corman க்கு கிடைத்தது.

தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகராக மூன்று துறைகளிலும் கால்பதித்து வெற்றிகொண்ட அமெரிக்க கலைஞரான Roger Corman, இன்று தனது 90 வயதிலும், குறைந்தது வருடத்திற்கு ஒரு படம் தயாரிப்பவர். 7 தசாப்தகாலமாக சினிமாவில் மேற்குலக சினிமாவில் வலம் வரும் இவர் இன்றைய தொழில்நுட்பகால சினிமாவுக்கு ஏற்றால் போலவும் கதைபடைக்கத் தெரிந்தவர். இதனால் தான் தொலைக்காட்சி வகை சினிமா முதல் Netflix வரை இன்றும் அனைவருக்கும் இவர் தேவை. புகழ்பெற்ற இன்றைய இணையத் தொடரான Splatter இவருடைய உருவாக்கத்தில் வலம் வரும் படைப்பாகும். 

Low-Budget Filmmaker என்பதே இவருக்கான அடைமொழி. ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை. இருப்பதைக் கொண்டே ஆச்சரியங்களை படைக்க முடியும் என அமெரிக்காவின் 20ம் நூற்றாண்டு சினிமாவை மாற்றி எழுதியவர். 

இன்றைய உலகின் மிகச் செல்வாக்கான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் பலர், இவருடைய Low-Budget திரைப்படங்களால் வெளி உலகுக்கு பிரபலமானவர்களே. உதாரணம் :Robert Towne, Francis Ford Coppola, Martin Scorsese, Ron Howard, Jonathan Demme, James Cameron மற்றும் Joe Dante.

உலகின் முதலாவது Biker Movie (The Wild Angels), முதலாவது எதிர்க்கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மாயத்தோற்றவகை சினிமா (The Trip) என இவருடைய இயக்கத்தில், தயாரிப்பில் வெளியான சாதனைப்படங்கள் எண்ணிலடங்காதவை. மூன்று நாட்களிலும் ஒரு முழு நீளத் திரைப்படத்தை படம்பிடிக்க முடியும் என முதன்முறையாக நிரூபித்துக் காட்டியவர். ஒரு முறை இவரை அணுகிய அமெரிக்காவின் 21th Century தயாரிப்பு நிறுவனம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒரு படத்தை தயாரிக்க அனுமதி கொடுத்தது.  அவர் அப்படத்தை செய்து முடித்த போது மிகுதியாக இருந்த தொகை 400,000 அமெரிக்க டாலர்.  ஒரு படம் செய்வதில் தேவையில்லாமல் நேர விரயத்தையும், பண விரயத்தையும் செய்யக் கூடாது. அது அவசியமே இல்லை என வாதாடும் Corman, இந்நிறுவனங்களின் தயாரிப்பு தொழில்நுட்ப முறையை கடுமையாக விமர்சிப்பவர். 

Cinémathèque Française எனும் பிரான்ஸின் அதி உயர் சினிமா விருதை தனது 38 வயதில் பெற்றுக் கொண்டு இவ்விருதை இள வயதில் பெற்ற ஒரே ஒரு திரைப்பட இயக்குனராக இன்றுவரை மிளிர்கிறார். 

நேற்று அவருக்கு லொகார்னோ திரைப்பட விழாக் குழு தனது அதியுயர் கௌரவ விருதை வழங்கிய போது, «லொகார்னோவுக்கு வருவது, எனது சொந்த வீட்டுக்கு வருவது போன்றது. இளம் திரைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், Independence Cinema வை ஊக்குவிக்கவும் லொகார்னோவுடன் வேறு  எந்தவொரு திரைப்பட விழாவையும் ஒப்பிடமுடியாது, தொடர்ந்து உங்களது தனித்துவப் பண்புடன் பயணியுங்கள்» என்றார். 

«இது நீங்கள் கதை சொல்லும் நேரம்» : Harvey Keitel

இதேவேளை  பியாற்சே கிராண்டே திரையரங்கில் இரு தினங்களுக்கு முன்னர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் அமெரிக்க பிரபல நடிகரான Harvey Keitel.

அமெரிக்க ஹாலிவூட்டின் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், எதிர்மறையான, வன்முறையான கதாபாத்திரங்களுக்கும் மிகப்பிரபலமான Harvey Keitel, மாற்றுச் சினிமா இயக்குனர் Martin Scorses இன் Mean Streets, Taxi Driver ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். The Piano, Pulp Fiction திரைப்படங்களிலும் இவருடைய நடிப்புத் திறன் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும்.  Martin Scorsese மற்றும் Tarantino ஆகிய இயக்குனர்கள், வெளியுலகுக்கு அடையாளம் காணப் பெறாத நிலையில் அவர்களுடைய திரைப்படங்களில் நடித்தவர். 

லொகார்னோ திரைவிழா ரசிகர்களுடனான கேள்வி, பதில் நிகழ்வில் அவர் பங்கேற்ற போது, வணிக நோக்கத்திற்காக திரைப்படங்களில் வன்முறைகளை காண்பிப்பது மிக ஆபத்தானது. வன்முறைகளின் உண்மையான ஆபத்தினை எம்மால் உணர முடியாது. என்னைப் பொருத்தவரை சினிமாவில் வன்முறைகள் காண்பிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வன்முறைகளின் நிஜப் பண்புகளையே அது வெளிப்படுத்த வேண்டும். 

இன்றைய இளைஞர்கள் வீடியோ கேம்களில் வன்முறைகளை விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களை அறைந்தாலோ, அடித்தாலோ ஏற்படும் சிறிய வலியைக் கூட, போலி வீடியோ கேம் வன்முறைகள் வெளிப்படுத்துவதில்லை. வீடியோ கேம்களால், நிஜ வன்முறைகளை எதிர்த்து போராட முடியாது என்றார். 

பியாற்சே கிராண்டே மேடையில் அவருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து அவர் கூறியது, «இன்றைய தொழில்நுட்ப உலகம் உங்களது திறனை வெளிபப்டுத்த இன்னமும் அதிக கதவுகளை திறந்து வைத்திருக்கிறது. உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கிறது. அவற்றை சினிமாவில் கொண்டுவாருங்கள். உங்களது கதைகளை பார்க்க, கேட்க நாம் ஆர்வமாக இருக்கிறோம். சினிமா படைப்புக்கள் எவராலும், எந்நேரத்திலும் உருவாக்கப்படலாம். நிதிச் சூழலையோ, படைப்பாய்வகச் சூழலையோ தடையாக பார்க்காதீர்கள். இது உங்களுக்கான நேரம் என்றார்.

4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து : ஸாரா

 

Big budget is not necessary for a good movie : Roger Corman's way of the cinema 

Roger Cormanan and Hervey Keitel are two important cinema artists in the 69th Locarno film festival who awarded special awards in their fields. Roger Corman awarded with annual Filmmakers Academy's guest of honor award 90th years old Roger Corman achieved great position in western cinema as a producer, director and actor.

He made couple of hundred movies for more than 7 decades. He knows how to make movies and TV serials perfectly in this technological age. Therefore not only cinema companies need him but also TV serials such as Netflix also wants him. The popular Internet serial 'Splatter' is also his creation. Roger Corman's identity in western cinema is that he is a Low-Budget Filmmaker. It is absolutely right. He changed the big budget hollywood block buster trend in 20th century and made a history among filmmakers.

Many filmmakers followed the path of Roger Corman after his achievement in Hollywood. World's first Biker Movie 'The Wild Angels' and illusion film (The Trip) were directed by Corman and he even made a movie in 3 days too.

Roger Corman was the first person who awarded by French Cinémathèque Française award in his 38th age. When he awarded the highest honorable award in Locarno and spoken to audience he told, "I feel like coming my home whenever I come to Locarno. This film festival is unique with its qualities such as motivating young artists and independent cinema. Please travel like the same way in future too".

Two days before the popular US actor and an oscar and Golden Globe Award nominee Harvey Keitel was awarded to life time achievement award in Locarno. His films titled 'Mean Streets' and'Taxi Driver' are very popular. He has acted well even in these movies,' The Piano' and 'Pulp Fiction.'

When Harvey answered to spectators questions in Locarno, he told violence in cinema should be realistic and it is not fault. TV games and Video games cannot push violence deeply in society. When Harvey spoken to piazza grande audience he told,'today's technical world has opened its door to everybody in the world. so why are you waiting for?  bring each of your talents and story. We are so much aware to see them. Your effort cannot be blocked by any financial situation or cinema  trend.'

 - 4tamilmedia's special reporters from Locarno

- English translation by Navan 

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula