தமிழ் சினிமாவில் சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் நடித்து அசரடித்தவர் ரம்யா. அதனாலேயே தமிழ் ரசிகர்கள் அவரைக் குத்து ரம்யா என்று அழைத்து வருகின்றனர். ஆனால் இவரது முழுப் பெயர் திவ்யா ஸ்பந்தனா.
அதன்பிறகு அவர், கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உட்பட பல தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் தனது தாய்மொழி சினிமாவான கன்னட சினிமாவுக்குத் திரும்பினார். ஒரு கட்டத்தில் பிஸியாக நடித்துகொண்டிருந்தபோதே இவர், சினிமாவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். இப்போது அரசியலும் கசந்துவிட்டதால் அதிலிருந்து இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்யா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார் என முன்னணி கன்னட செய்தித் தளங்கள் தெரிக்கின்றன.
இதற்கிடையில், ரம்யாவின் இரண்டாவது காதல் தற்போது கர்நாடக மாநிலத்தில் ‘ஹாட் டாபிக்’ ஆகியிருக்கிறது. ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரம்யா பதிவிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.
அவர் பெயர், கரண் ஜோஷி என்றும் ரம்யாவின் நெருங்கிய நண்பர் என்றும் சிலர் அந்தப் படத்துக்கு எதிர்வினை ஆற்றினர். இன்னும் சில இருவரும் காதலித்து வருவதாக தெரிவித்தனர். ஆனால், அதுபோன்ற எதிர்வினைகளுக்கு ரம்யா பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. நடிகை ரம்யா, ஏற்கனவே போர்ஸுகல் நாட்டை சேர்ந்த ரபேல் என்பவரை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது விட்டனர். அதையடுத்தே ரம்யா தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
Comments powered by CComment