சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 13-ஆம் தேதி ‘டான்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் அடுத்து ரஜினி தன்னுடைய 169-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதை, சிவகார்த்திகேயன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். “நான் ஊருக்குச் சென்றிருந்தபோது, எனது பெரியம்மா ‘என்னடா.. தலைவரோட நடிக்கிற போல.. நியூஸ் தீயா பரவுது’ என்றார். அந்த அளவுக்கு யாரோ கொழுத்திப் போட்டுவிட்டார்கள். நண்பன் நெல்சன் இயக்கத்தில் ரஜினி சார் நடிக்கும் படத்தின் கதை கூட எனக்குத் தெரியாது” என்று நம்மிடம் குறிப்பிட்டார்.
அதேபோல், ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள ப்ரியங்காவிடம் ரஜினியின் மகளாக நடிக்க, பேசி வருவதாகவும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் செய்தி வெளியானது. ஆனால், பிரியங்கா தரப்பில் இதை மறுத்துள்ளனர்.
Comments powered by CComment