நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம், வரும் 13-ஆம் தேதி படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி, படத்தின் டிரைய்லர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, வில்லனாக இயக்குநர் செல்வராகவன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘பீஸ்ட்’படத்திலிருந்து ஏற்கெனவே 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. இந்நிலையில் படத்தின் டிரைய்லரை ரசிகர்கள் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் நெல்சன் தனது அடுத்த படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைக்கோர்க்கும் படத்திற்கு விஜய்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.
இது பற்றி இயக்குனர் நெல்சன் தன்னுடைய பதிவில் “விஜய் சாரும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். ‘பீஸ்ட்’படப்பிடிப்பின்போது அவர் என்னிடம், ‘ரஜினி சார் தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு கொண்டிருக்கிறார். நீங்களும் முயற்சி செய்யுங்கள்” என்றார். ஆனால், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்ல எனக்குத் தயக்கமாக இருந்தது. அதை எல்லாம் உடைத்து, ‘நீங்கள் தைரியமாக கதையை ரெடி பண்ணி அவரிடம் சொல்லுங்கள். ‘பீஸ்ட்’முடிந்ததும் ரஜினி படம் தொடங்க சரியாக இருக்கும்’ என்றார் விஜய் சார். அவருடைய எதிர்மறையான குணம் தான் இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்திருக்கிறது” என மனம் திறந்துக் கொட்டியுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Comments powered by CComment