counter create hit 'கடைசி விவசாயி' பட இயக்குநரைத் தேடி பயணப்பட்ட மிஷ்கின்!

'கடைசி விவசாயி' பட இயக்குநரைத் தேடி பயணப்பட்ட மிஷ்கின்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ரியல் எஸ்டேட் மாபியா பிரச்சினையால் தமிழ் நாட்டின் ஜீவாதாரத் தொழில்களில் ஒன்றான
விவசாயம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களை விவசாயிகளுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பிடுங்கி, வீட்டுமனைகளாக விற்றுவிடுவதைக் கதைக்களமாகக் கொண்டு, ‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம்தான் ‘கடைசி விவசாயி’. இந்தப் படத்தைப் பார்த்து வியந்த மிஷ்கின், அந்தப் படத்தின் இயக்குநரைத் தேடி அவரது சொந்த ஊருக்கே போய் பாராட்டித் திரும்பியிருக்கிறார். இதுபற்றி ஊடகங்களுக்கு மிஷ்கின் அனுப்பியிருக்கும் குறிப்பில்:

“கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும். அன்புடன் மிஷ்கின்” என நெகிழ்ந்து கூறியுள்ளார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula