#மீடூ சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘5 ஸ்டார்’.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருந்த இப்படத்தில் பிரசன்னா, கனிகா உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். ஐந்து நண்பர்களை சுற்றி நடக்கும் கதையை பின்னணியாகக் கொண்ட இப்படம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரசன்னா, கனிகா ஜோடி மீண்டும் இணைந்து ஒரு வெப் தொடரில் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். விக்னேஷ் விஜயகுமார் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். இதனை கனிகா தனது சமூகவலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது பற்றிய அவரது பதிவில், “2002-ஆம் ஆண்டு சுசி கணேசனின் ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் என்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய முதல் திரை ஜோடியான பிரசன்னாவுடன் மீண்டும் இணைகிறேன். இது ஒரு வாழ்க்கை சுழற்சி போல இருக்கிறது. உன்னோடு பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் பிரசன்னா” என்று கனிகா பதிவிட்டுள்ளார்.
Comments powered by CComment