ஹெச். வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக அஜித் - ஹூமா குரேஷி நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் பரப்புரைப் பணிகள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் படத்தின் புதிய டீசர்களை தினசரி தன்னுடைய சமூக வலைதளத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு வருகிறார். இன்று வெளிவந்துள்ள புதிய டீசரில் வலிமை குறித்து அஜித்குமார், சக நடிகர்களுடன் பங்கேற்றுள்ள ஆக் ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதோ அந்த டீசர்
Comments powered by CComment