கல்யாண கிருஷ்ணன். அவருடைய இயக்கத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களை தயாரித்த ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் படம் இது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளது. ‘அகிலன்’ என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானிஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.
துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்தில் நடைபெறவுள்ள படப்பிடிப்புடன் ஷீட்டிங் நிறைவடைகிறது. முழுக்க துறைமுக பின்னணியில் உருவாகியுள்ள படத்தில் கடலம்மாவுடன் போராடும் ஜெயம் ரவியின் கதாபாத்திரமும், நடிப்பும் பேசப்படும் என்று இயக்குநர் தெரிவித்திருக்கிறார் இது ஜெயம் ரவியின் 28-வது படம். இப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.