ஜி.வி.பிரகாஷ் கத்திமேல் நடந்த படம் ‘பேச்சிலர்’. சமூகத்துக்கு நல்ல கருத்தை
திவ்யா பாரதிக்கு தற்போது பேச்சிலர் படத்தில் ‘லிவிங் டுகெதர்’ கேரக்டரை துணிச்சலாக நடித்துக் காட்டியதால் ஏற்பட்ட பிரச்சினை கொஞ்ச நஞ்சமல்ல. விமர்சகர்கள் அவரைப் பாராட்டினாலும் நெட்டிசனகள் அவரை ட்ரோல் செய்து தீர்த்தனர். தவிர அவரது உயரம் குறைவான தொற்றத்தைக் குறிப்பிட்டு. இவரெல்லாம் ஒரு ஹீரோயினா என்று ஓட்டிய நெட்டிசன்கள்தான் அவருடைய அதிரடி ஆடைக் குறைப்பு புகைப்படங்களுக்கு லைக்குகளைக் கொட்டினார்கள். இத்தனைக்குப் பிறகும் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தார் திவ்யா பாரதி. ஆனால், ‘பேச்சிலர்’ படத்துக்குப் பின், ஒரு படம் கூட புக் ஆகாமல் மருகிக்கொண்டிருந்தார். ஒருவழியாக இப்போது ஒரு படம் கிடைத்துவிட்டது. மலையாளத்தில் 2019-ல் வெளியான ‘இஸ்க்’ படத்தை தமிழில் மறுஆக்கம் செய்கிறார்கள். இதில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்கிறார் திவ்யா பாரதி. திவ்யா பாரதி நினைத்தது ஒன்று கிடைத்தது ஒன்று!
Comments powered by CComment