ஓடிடி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில், ‘ஷியாம் சிங்க ராய்’
நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து சங்காரந்திக்கு வெளியான ‘பங்கார்ராஜு’ படமும் வெற்றியை அள்ளியிருப்பதால், கீர்த்தியை தமிழுக்கு யார் முதலில் அழைத்து வருவது என்பதில் கோலிவுட்டில் கடும் போட்டி நடந்து வருகிறதாம். ஏற்கெனவே இயக்குநர் லிங்குசாமி முந்திக்கொண்டிருக்கிறார். அவர், தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கி முடித்திருக்கும் 'தி வாரியர்' படத்தில் கீர்த்தி ஷெட்டிதான் நாயகி. ‘எங்களுக்குப் பொறுமையில்லை; உங்களைத் தமிழ்ப் படத்தில் எப்போது காண்பது’ எனத் தனது எதிர்பார்ப்பை பதிவிட்டிருக்கிறார் ஒரு இணையவாசி!
Comments powered by CComment