விவாகரத்து சர்சையால் சமீபத்தில் பேசுபொருளாகியிருப்பவர் நடிகர் தனுஷ். இன்னொரு பக்கம்,
மொழிகளைக் கடந்து இந்தி, ஆங்கிலப்படங்களில் நடித்து வந்தார். தற்போது நேரடி தெலுங்குப்படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் இந்தியில் தயாரிக்கப்பட்ட அத்ரங்கி ரே' படம் ஓடிடியில் வெற்றி பெற்றதால் மேலும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கடந்த 2013-ல் ஆனந்த் எல்.ராய் - தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான ‘ராஞ்சனா’ படம் சுமார் வெற்றியைப் பெற்றது. இதே கூட்டணி மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 'அத்ரங்கி ரே' படத்துக்காக இணைந்தது. இதில் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோருடன் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு ஓடிடியில் கிடைத்தபோதும் தமிழ் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால், வடமாநிலங்களில் கொரோனா முன்றாம் அலைத் தீவிரமாக இருந்ததால் வீட்டிலிருந்தே அத்ரங்கி ரே படத்தைப் பார்த்து வெற்றிபெற வைத்தனர்.
இதனால், அதே கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணையவுள்ளது. ஆனந்த் எல்.ராய் இயக்குநர் பொறுப்புடன் தயாரிப்பையும் மேற்கொள்ளவிருக்கிறார். ஆனந்த் எல்.ராய்யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கலர் எல்லோ புரொடக்ஷனின் கீழ் தனுஷ் நடிக்கும் படத்தை தயாரித்து இயக்கவுள்ளார் என்றும், இந்தப் படம் ஆக்ஷன் காதல் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இதன் மூலம் தனுஷ் பாலிவுட்டில் தொடர்ந்து இனி படங்களில் நடிப்பார் என்பது உறுதியாகியிருக்கிறது
Comments powered by CComment