கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய ரசிகர் மன்றங்களை நிர்வகிக்க முடியாமல் சிம்பு தடுமாறி வந்தார்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த முடியவில்லை. என்றாலும் சிம்புவை அவரது ரசிகர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் சிம்புவின் ரசிகர்கள் நாகரிகமாக நடந்து கொள்ளும் குழுவினர் ஆகவே இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய ரசிகர் மன்றத்தை சிம்பு மறுகட்டமைப்பு செய்கிறார். அதற்காக அகில இந்திய சிலம்பரசன் T.R. ரசிகர் மன்ற தலைவர் T.வாசு புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை சிம்புவிடம் வழங்கினார்.
விரைவில் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என வாசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment