ஆர்யாவுக்கு பெயர் பெற்றுக்கொடுத்த படங்களில் ஒன்று ‘டெடி’. அதை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்தார்.
அந்தப் படத்திற்கு பிறகு, ஆர்யா - இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வருவது இந்தப் படத்துக்கு ‘கேப்டன்’ என்ற தலைப்பை இன்று அறிவித்துள்ளனர். இது குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில்: “கேப்டன் எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது.
மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் ஓடிடி தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதவீதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும்” என்றார். ஆர்யாவே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.‘கேப்டன்’ படத்திற்கு, டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார்.
Comments powered by CComment