தங்களுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தை மில்லியன்களில் பின் தொடர்பவர்களைக் கொண்ட சினிமா பிரபலங்கள், அதில் பல வர்த்தகத் தயாரிப்புகளைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
அவர்களைத் தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி, அதற்கான தொகையை லட்சக்கணக்கில் நிறுவனங்களிடமிருந்து பெற்றுவருகிறார்கள். இந்நிலையில், நடிகை ரெஜினா கசாண்ட்ரா 'விஸ்கி' நிறுவனம் ஒன்றுக்கான விளம்பரத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘விஸ்கியை தண்ணீர் கலக்காமல் குடிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். விஸ்கியின் இயற்கை வாசம் என்னை எப்போதுமே கிரங்க வைக்கும்’ என்று அந்த விஸ்கியைப் புகழ்ந்து வீடியோவும் பதிவிட்டுள்ளார்.
ரெஜினா கசாண்ட்ராவின் இந்த விளம்பரப் பதிவில் பின்தொடர்பாளர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். “மதுவை தயவுசெய்து விளம்பரப்படுத்த வேண்டாம். இனி உங்களைப் பின் தொடர மாட்டேன்’. ‘வெளிப்படையாக இப்படி மதுவுக்கு விளம்பரம் செய்ய சட்டம் அனுமதி அளித்து இருக்கிறதா?’, ‘உங்களுக்கு பொது அமைதி குறித்து எதுவும் தெரியாதா?” எனப் பலவிதமான கண்டனங்களை ரசிக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ரெஜினா இதுபற்றி எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை.
Comments powered by CComment