கமல், விஜய், அஜித் உட்பட தமிழில் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால்.
கொரோனா காலத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு தெலுங்கில் ‘ஆச்சார்யா’ உள்பட சில படங்களில் நடித்து வந்தார். அதோடு, நாகார்ஜூனாவின் ‘கோஸ்ட்’ திரைப்படத்திலும் நடிக்க ஒப்பதாமாகியிருந்தார். ஆனால், தான் கர்ப்பமானதைத் தொடந்து அத்திரைப்படத்திலிருந்து விலகினார் காஜல். அந்தப் படத்தில் காஜலுக்கு பதில் இலியானா நடிப்பதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது அந்த வேடத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இதுதவிர அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்கான ‘போலா சங்கர்’ படத்திலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாகத் தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த வேடத்தில் நடிக்க தமன்னா கமிட்டாகியிருக்கிறார். ஸ்ருதிஹசன், சமந்தா, ராஷ்மிகா மந்தனா போன்ற புதிய கதாநாயகிகளின் வரவால், தெலுங்கில் தன்னுடைய இரண்டாவது ரவுண்டிலிருந்து வெளியேறிய தமன்னா, இணையத் தொடர்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது, புதிய பட வாய்ப்புகளின் மூலம் தன்னுடைய மூன்றாவது ரவுண்டைத் தொடங்கியிருக்கும் தமன்னா, கதாநாயகியாக அறிமுகமாகி 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
Comments powered by CComment