தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை முழுப்படமும் தயாராகி, சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் அஜித்தை ஒரு பைக்கராக முன்னிறுத்தும் திரைப்படம். வரும் பொங்கல் தினத்தையொட்டி 2022 ஜனவரி 12-ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தபோது. அஜித் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார். அதேபோல், உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்து ஆலோசனை செய்த செய்தி, அப்போது வெளியானது நினைவிருக்கலாம்.
அதேசமயத்தில்தான் அவர் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார் அஜித். மேலும் அங்கு எல்லையில் ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் நடிகர் அஜித் உரையாடியுள்ளார். பின்னர் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் புகைப்படம் ஒன்றை நடிகர் அஜித் எடுத்துக்கொண்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
டெல்லியையும் அதைச் சுற்றியுள்ள இன்னும் என்னென்ன இடங்களுக்கு அஜித் சென்றுள்ளார் என்பது அடுத்தடுத்து படங்களுடன் வெளியாகும். அதேபோல், அடுத்த படத்தில் நடிக்கும் முன்பு, அஜித் ஒருசில நாடுகளைச் சுறறிவிடுவது என்ற திட்டத்தில் இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
Comments powered by CComment