“ருத்ரன்” என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் -பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரிப்பதுடன் முதல் முறையாக இயக்குநராகவும் அறிமுகமாகிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தில் மேலும் கூட்டும் வகையில் டிஸ்கோ சாந்தியின் தந்தையும் பழம்பெரும் கதாநாயக நடிகருமான சி.எல்.ஆனந்தன் - சச்சு நடித்த ‘வீரத்திருமகன்’ என்ற வெற்றிப் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் முறைப்படி பாடலின் உரிமையைப் பெற்றுள்ளார்.
இந்தப் பாடலை இந்தப் படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் ரீமிக்ஸ் செய்துள்ளார். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Comments powered by CComment