counter create hit தீபாவளி ரிலீஸ் ரேஸில் இணைந்தார் சூர்யா!

தீபாவளி ரிலீஸ் ரேஸில் இணைந்தார் சூர்யா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திரையரங்குகளுக்கு கூட்டம் வராத நிலையில் தான் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்களை அமேசான் ஓடிடியில் விற்று நஷ்டத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொணடு வருகிறார் சூர்யா.

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த, விக்ரமின் மகான், சிம்புவின் மாநாடு, அருண் விஜயின் ‘வா டீல்’ ஆகிய படங்கள் மோதுகின்றன. இந்த தீபாவளி ரேஸில் திரையரங்குகளில் மோதாமல் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அமேசன் பிரைம் ஓடிடியில் தான் நடித்த 'ஜெய் பீம்' படத்தை வெளியிடுவதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா இதில் நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 'ஜெய் பீம்' நவம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது. மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது என இயக்குநர் ஞானுவேல் தெரிவித்துள்ளார்.-* ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் இரண்டாம் தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula