நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம். ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.
திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த இந்த திரைப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு குறித்து அழகாக காட்டப்பட்டுள்ளது. அதேபோல் சந்தானத்தின் நண்பர் குக் வித் கோமாளி புகழ் சந்தானத்தை ஒருதலையாக காதல் செய்பவராக நடிக்கிறார். சந்தானத்தின் நடிப்பு மிகவும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
எம் எஸ் பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் ‘சபாபதி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார். சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள ‘சபாபதி’-யின் சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார்.
Comments powered by CComment