இதற்கு முன், விஷ்ணு வர்த்தன், சிறுத்தை சிவா ஆகிய இருவரது இயக்கங்களில் தொடர்ந்து படங்களில் நடித்திருக்கிறார் அஜித்.
தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாம் முறையாக நடிக்கிறார். இதை அஜித்தின் தற்போதைய தயாரிப்பாளரும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். வலிமை படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கவுள்ள இந்தப் படத்தி பேச்சுவார்த்தை பல மாதங்களுக்கு முன்னரே நடந்து முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் இப்போது தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அஜித்தோ, ஹெச்.வினோத்தோ இதுவரை உறுதிப்படுத்தாத நிலையில் ஊடகம் ஒன்றுக்கு போனிகபூர் அளித்துள்ள பேட்டியில் போனி கபூர் இதை உறுதி செய்துள்ளார். அவர் தன்னிடைய பேட்டியில் “ஹெச். வினோத் மீது எனக்கு தொடர்ந்து நம்பிக்கை வருவதற்கு ஒரு காரணம் உண்டு. அவர் தேவையில்லாமல் பேசமாட்டார். அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை அவர் இயக்கும் காட்சிகள் சொல்லும். சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் சில கதைகளைச் சொல்ல வினோத்தை அஜித் மும்பைக்கு அனுப்பி வைத்தார். அப்போது என் மனைவி ஸ்ரீதேவியிடம் வினோத் தமிழில் உரையாடினார். வினோத் கூறிய கதைகள் அவரை அதிகம் ஈர்த்தன. வினோத் தெளிவாக இருந்தார். அதனால்தான் எங்கள் பயணம் தொர்கிறது. தற்போது அஜித் - வினோத் உடன் நான் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளேன். விரைவில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என்று கூறி அதிரடி செய்திருக்கிறார்.
Comments powered by CComment