‘சாயம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் நேற்று கலந்துகொண்டு பேசினார் தளபதி விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரன்.
அவர் பேசும்போது “படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிகிறது என்று இந்தப் படத்தின் இயக்குநர் சொன்னார். இப்படியொரு கதையைத் தேர்வு செய்ததற்காக அவருக்குப் பாராட்டுகள். இவரைப்[போல் சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..?
லாபம் : விமர்சனம்
என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன்.. முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.. பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது.. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.” என்று குறிப்பிட்டார்.
Comments powered by CComment