ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மெண்டல்’ இண்ஸ்பெக்டராக தர்பார் படத்தில் நடித்தார் ரஜினி.
அந்தத் திரைப்படம் சுமார் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ‘அண்னாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அதிக பொருட்செலவில் அண்ணன் - தங்கை கதையாக உருவாக்கியிருக்கிறது இந்தப் படம். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்துள்ளனர். மேலும் சித்தார்த், லிவிங்ஸ்டன், மீனா, குஷ்பூ, பாண்டியராஜன் என பெரும் நடிகர்கள் குழு நடித்துள்ளது.
படத் தயாரிப்பாளரின் முகமூடியைக் கிழித்த பிக்பாஸ் அனிதா!
இத்திரைப்படம் கடந்த 2020 தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பிற்கு ஏகப்பட்ட தடங்கல்கள் உருவான நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பான சன் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Comments powered by CComment