counter create hit சரத் குமாரால் ஐஸ்வர்யா ராயின் வேடம் கலைந்தது!

சரத் குமாரால் ஐஸ்வர்யா ராயின் வேடம் கலைந்தது!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு இளங்கோ குமாரவேல் - ஜெயமோகன் ஆகிய இருவரும் இணைந்து திரைக்கதை எழுதிட மணி ரத்னம் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக இயக்கி வருகிறார்.

லைக்கா நிறுவனத்துடன் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இவர்கள் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும் கார்த்தி வல்லவராயன் வந்தியத் தேவனாகவும் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் சரத்குமார் பழவேட்டரையராகவும் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், பொன்னியின் செல்வன் நாவலின் எதிர்மறைக் கதாபாத்திரம் நந்தினி தேவியாக யார் நடிக்கிறார்கள் என்பது பெரும் ரகசியமாக வைக்கப்பட்டது. அதாவது சோழ சாம்ராஜ்ஜியத்தை அழித்தொழித்து பாண்டியர்கள் ஆட்சியை தஞ்சையில் நிறுவிட, சிறுவனான சோழ இளவரசனை ரகசியமாக சோழநாட்டில் பதுக்கி வைத்து, தஞ்சை அரண்மனையின் மெய் காவல் படைத்தலைவரான பெரிய பளுவேட்டறையின் ஆசை நாயககியாக அவரை மணந்துகொண்டு, அதேநேரம் அவருடன் உடலளவில் கலந்துவிடாமல் மனதில் வஞ்சகத்துடன் வாழும் வில்லி கதாபாத்திரத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் நடிப்பை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்கள் சரத்குமார்.

அவருடன் இணைந்து நடித்துவந்த சரத்குமார், திடீரென்று தனது குடும்பத்தினரை செட்டுக்கு அழைத்து ஐஸ்வர்யா ராயுடன் போட்டோ எடுத்து சமூக வளைதளத்தில் போட்டபோதே, ஐஸ்வர்யா ராஜ், நந்தினியாக நடிக்கிறார் என்பது ஊடகங்களுக்கு தெரிந்துவிட்டது. இது போதாதென்று, நந்தினி தேவியால் மறைத்து வாழ வைக்கப்படும் பாண்டிய இளவரசானாக நடித்து வந்த குழந்தை நட்சத்திரமான ராகவன் முருகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐஸ்வர்யா ராயுடன் தான் எடுத்த செல்ஃபி படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், தான் பாண்டிய இளவரசனாக நடித்து வருவதாகவும் உண்மையை உடைத்துவிட்டார். இவர், ‘சேதுபதி’, ‘மாரி 2’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்படத் தக்கது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula