மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ‘அழகிய கண்ணே’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதில் திண்டுக்கல் லியோயின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படம் தவிர, நீயா... நானா.. கோபிநாத் நடிக்கும் மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பென்சில்’ படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
கதையம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில், ஒரு மருத்துவர் தான் சந்திக்கும் விநோதமான நான்கு கர்ப்பிணிகள் பற்றிய கதையும், அவர்களின் பிரச்சனைகளும் தீர்வும் பேசப்படுகிறது. விஜய் டிவி புகழ் `நீயா நானா` கோபிநாத் மருத்துவர் கதாப்பாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்க, பிரதான கதாபாத்திரங்களாக அனிகா, சீதா, வனிதா விஜயக்குமார், லெனா குமார், அபிஷேக், சச்சின், க்ரிஷிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
அட்டகத்தி, குக்கூ ஆகிய படங்களை ஒளிப்பதிவு செய்த பி.கே.வர்மா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். ‘விஷ்ணு மோகன் சித்தாரா’ இந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகிறார்.
Comments powered by CComment