கே.ஜி.எஃப் என்கிற ஒரு படத்தின் மூலம் இந்தியா அறிந்த நட்சத்திரமாக ஆகிவிட்டார் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் கன்னட நடிகரான யாஷ்.
அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்துக்காக பல மொழி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் புது அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அங்கே புதுமனை புகுவிழா நடத்தியிருக்கிறார்.
ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்ற யாஷ் வீட்டு கிரகபிரவேச விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. யாஷும் அவரது மனைவி ராதிகா பண்டிட்டும் இணைந்திருக்கும் இந்தப் புகைப்படங்களை யாஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
பெங்களூரு நகரத்தில் பிரெஸ்டீஜ் கோல்ஃப் எனும் உயர்தட்டு வகுப்பினர் மட்டுமே வாங்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாங்கியிருக்கிறார் யாஷ். வீட்டின் உட்புற வேலைகள் சில காலமாக நடந்து வந்த நிலையில் தற்போது அவை முடிந்துவிட்டதால், இன்று திருச்சடங்குகளுக்குப் பிறகு அவரது குடும்பம் அங்கு குடிபெயர்ந்திருக்கிறது.
Comments powered by CComment