இரண்டாம் அலை கொரோனா தொடங்கிய நேரத்தில் பெருந்தொற்றில் மாட்டிக்கொண்டார் பூஜா ஹெக்டே;
ஆனால் 7 நாட்களில் தொற்றிலிருந்து வெளியே வந்துவிட்டதாக அறிவித்தார். ஜார்ஜியாவில் நடந்த விஜய் 65 படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட இருந்ததாகவும் ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்துசெய்யப்பட்டதாகவும் அதன்பிறகே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார் பூஜா.
தற்போது ஹைதராபாத்தில் வசித்துவரும் பூஜா, அங்கே 100 ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். தன்னார்வலர்கள் மூலம் லாக் டவுனால் வேலையிழந்த 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அரிசி ஆகியவற்றுடன் தலா 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
அவர்களுக்கான சமையல் பொருட்களை அவரே கைப்பட பேக் செய்த புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் ‘நீங்கள் 1000 பேருக்குக்கு கூட கொடுக்கலாமே’ என்று சொல்ல... அதற்கு பூஜா ‘இது தொடக்கம்தான்’ என்று பதில் அளித்துள்ளார்.
Comments powered by CComment