தி ஃபேமிலி மேன் தொடருக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமேசன் ஓடிடி தளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் இணையத் தொடர் ‘தி பேமிலி மேன் 2’ ஜூன்4- ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதம் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இரண்டாம் சீசன் எடுத்துள்ளனர்.

மனித வெடிகுண்டு போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் இத்தொடரின் ட்ரெய்லர் வெளியாகி நெட்டிசன்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படி அது வரவேற்பை பெற்றிருப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு முக்கிய காரணம். காரணம் அவர்கள் கொதித்துப் போய் கிடக்கிறார்கள்.

காரணம் ட்ரைலரில் வரும் காட்சிகளும் வசனங்களும் தமிழகத் தமிழர்களையும் குறிப்பாக ஈழத்தமிழர்களையும் அவங்களுடைய இன விடுதலைப் போராட்டத்தையும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கொதித்து வருகின்றனர். #FamilyMan2_against_Tamils என்கிற ஹேஷ் டேக்கை இந்திய அளவில் பிரபலப்படுத்தி வருகின்றனர். அநேகமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த இணையத் தொடரை தமிழ்நாட்டில் தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.