நடிகை ஓவியா நடிகையாக படங்களில் நடித்துப் பெற்ற புகழை விட பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் நடித்துப் பெற்ற புகழே அவருக்கு ஓவியா ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை கொண்டு சென்றது.
தற்போது சொந்த மாநிலமான கேரளாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார் ஓவியா.
இதற்கிடையில் ‘நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன் என்று கேட்டு பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில், டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. உடனே இது குறித்து பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு அந்த போஸ்டர்களை ஒட்டிய 20 பேரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் கைது செய்தது. இதை எதிர்த்து #ArrestMetoo என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஓவியாவும் ‘இது ஜனநாயகமா? எனக் கேள்வி எழுப்பி #ArrestMetoo ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டுள்ளார். இதை ஓவியாவின் ரசிகர்கள், ஆர்வலர்கள் பாராட்டி ரீட்வீட் செய்து வருகின்றனர்.
Comments powered by CComment