கடைசியாக கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை எடுத்தார் இயக்குநர் பாண்டிராஜ். அப்போது பொள்ளாட்சி பாலியன் சம்பவம் போன்ற ஒன்றில் ஈடுபடும் கும்பலை திறமையாக பொறி வைத்துப் பிடிக்கும் கதாநாயகன் கதையை சூர்யாவுக்குக் கூறியுள்ளார் பாண்டிராஜ்.
அந்தக் கதைப் பிடித்துப்போனதால் தனது 40-வது படமாக அதை வைத்துக்கொள்ளலாம் என்று சூர்யா அட்வான்ஸ் கொடுக்க, அந்தப் படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என்று முன்வந்திருக்கிறது சன் டிவி. இதில் கார்த்தியை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
பொள்ளாட்சி சம்பவத்தில் பிரபல அரசியல்வாதியின் மகன் சம்பந்தப் பட்டிருந்ததும் அந்த அரசியல்வாதி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதையும் வாசகர்கள் அறிவார்கள். இந்நிலையிதான் இந்தக் கதையை சூர்யா தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், நாங்கள் எடுக்கப்போவது பொள்ளாட்சி பாலியல் சம்பவம் அல்ல என்று இயக்குநர் தரப்பில் மீடியாவில் செய்தி கசியவிட்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் திமுக அரசுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள். படப்பிடிப்பு தொடங்கும் முன் இன்னும் என்னவெல்லாம் செய்திகள் வரும் என்று தெரியவில்லை.
Comments powered by CComment