இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்தது 4தமிழ்மீடியா.
கணினித் தமிழோடு, புதிய நுட்பங்களை உள்ளிணைத்து, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும் 4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.
2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா குழுமத்தினராகிய நாம், செயல்விருப்பு மிக்க அனைவரையும், இணைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...
என்றும் இனிய நட்புடன்,
4தமிழ்மீடியா குழுமம்.
Comments powered by CComment