அன்புறவுகளுக்கு வணக்கம் !
ஒரு புதிய புத்தகத்தை அதன் வாசனையை நுகர்ந்து தடவி, அட்டை போட்டு, அழகு பார்க்கும் சிறு பிள்ளையாகவே இன்றும் 4தமிழ்மீடியாவுடனான எமது பந்தம்.
புதியவைகளை மற்றவர்களுக்கு அறியத் தரவேண்டுமாயின் அவை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஞானத்தினை எப்போதும் எமக்கு நல்கும் போதி மரம் இது. சலசலப்புக்கள் ஏதுமின்றி மெத்தனமாய் தொடரும் இந்தப் பயணத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பது ஆச்சரியத்துடன் கூடிய அழகான சுகானுபவம்.
2008ல் இணையத்தில் உலாவரத் தொடங்கிய ஒராண்டு நிறைவின் போது , 2009 ன் வலி சுமந்த நினைவுகளில் நெஞ்சம் கனத்து நின்றது போலவே, 12 ஆண்டுகளின் நிறைவின் போதும், ரைவஸ் பெருந்தொற்றின் பெருந்துயர் சூழவும் அழுத்தி நிற்கிறது. கொண்டாட்ட மனநிலைகள் தொலைப் போன இந்த வேளையில், உற்சாகத்தை உயிர்ப்பிக்கும் வகையிலான போட்டி அறிவிப்புக்கள் சிலவற்றை இன்று அறிவிக்கின்றோம். இவற்றின் வெற்றியாளர்களுடனும், விருதுகளுடனும், விரைவில் விழாவாகக் கொண்டாடி மகிழும் தருணமொன்றிற்காக காத்திருக்கிறோம் !
தொடரும் இப்பயணத்தில் இணைந்திருக்கும் அன்புறவுகளே!, தொடர்ந்தும் இணைந்திருங்கள் விரைவில் கூடிக் கொண்டாடி மகிழ்வோம் !
-4தமிழ்மீடியா குழுமம் சார்பாக,
இனிய அன்புடன்
மலைநாடான்.
Comments powered by CComment