அன்பிற்கினிய உறவுகளே !
4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது.
இந்த மகிழ்வினை சென்ற ஆண்டில் கொண்டாட விரும்பிய போதும், கொரோனா பெருந்தொற்றும், அதன் துயரங்களும், அந்த மனநிலையை மாற்றி விட்டது.
அந்தப் பெருந்துயரின் பிடியிலிருந்து விடுபடத் தொடங்கியிருக்கும் இந்த ஆண்டில், இதனை ஒரு பெருமகிழ்வாக எமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த மகிழ்வின் சிறப்பில் பலரும் பயன் பெறவும், எற்றவகையில் பல்வேறு வடிவங்களை எண்ணியுள்ளோம். எங்கள் எண்ணங்களின் வெளிப்பாடுகளை எதிர்வரும் 14.08.2021ல் உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் மகிழ்ந்து கொள்ளவும், தயாராகிவருகின்றோம்.
புதியவை காண...இணைந்திருங்கள்.
- என்றும் மாறா இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்.
Comments powered by CComment