இணைய வெளியில் தொடரும் ஏற்றமிகு பயணத்தின் இன்னுமொரு நிலை காணலுக்கான தயார்ப்படுத்தல் நேரம் இது. வரும் 14ந் திகதி எட்டாவது ஆண்டினை நிறைவு செய்து 9 வது ஆண்டிற்குள், உங்களோடு சேர்ந்து அடியெடுத்து வைக்கவுள்ளோம். அந்த மகிழ்வின் தொடக்கமென மாற்றம் கண்டுள்ளது 4தமிழ்மீடியாவின் தளவடிவமைப்பு .
வார இறுதியில் தொடங்கிய தொழில்நுட்பப் பணிகளின் முதற்கட்ட நிறைவோடு, சேவைக்குத் திரும்பியுள்ளோம். 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடுகைகளை மீளமைக்கும் பணிகள் தொடர்கின்றன. ஆதலால் இன்னும் சில நாட்களுக்கு, 4தமிழ்மீடியாவின் முன்னை இணைப்புக்களை நீங்கள் காண முடியாதிருக்கும். ஆயினும் இப் பணிகள் இன்னும் சில தினங்களில் முழுமைபெற்றுவிடும்.
நீங்கள் எவ்வகைச் சாதனத்தின் உதவியொடு இணைய வாசிப்பினை மேற்கொள்பவராக இருந்தாலும், இப்போது 4தமிழ்மீடியாவின் பக்கங்களை இலாவமாகவும், இலகுவாகவும் வாசிக்கும் வகையில் புதிய தளவடிவமைப்பினை நீங்கள் காணலாம். இந்த மாற்றம் கைத் தொலைபேசிகளின் வழி, இணைய வாசிப்பினை மேற்கொள்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
9வது ஆண்டை நோக்கிய பயணம் ஆரம்பமாகவுள்ள இந்த நாட்களில் மேலும் பல புதிய விடயங்கள் உங்கள் பார்வைக்கு வரவுள்ளது என்பதைத் தெரிவித்து, எப்போதும் போல் இணைந்திருங்கள், இன்னமும் பலம் பெறுவோம், பயன் பெறுவோம் எனச் சொல்லி, மீண்டும் சந்திக்க இப்போது விடைபெறுகின்றோம்.
- என்றும் மாறாத இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்
BLOG COMMENTS POWERED BY DISQUS