யூடியூப் கார்னர்
Typography

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை இயற்றிய  பெ.சுந்தரம் பிள்ளையின் தமிழ்த் தாய் வணக்கப் பாடலுக்கு புதிய வடிவில் இசையும், காட்சியமைப்பும் உருவாக்கியுள்ளனர். பிரமிக்க வைக்கும் ஒரு அழகியல் வண்ணம். தமிழ்நாட்டை மற்றுமொரு வடிவில் தொடர்கிறது கமெராவின் கண்கள்.

இசைப் பாடகரும், வயலின் இசைக் கலைஞருமான கார்த்திக் ஐயரின் குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு கார்த்திக் சரண் காட்சி வடிவமைத்துள்ளார். 

தமிழணங்கே எனும் பாடலைப் பற்றி இதுவரை தெரியாதவர்களுக்கு, அப்பாடலின் முதல் வரிகளும், அதன் அர்த்தமும்.

«நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

இப்பாடலின் அர்த்தம் : 

அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இப்பாடல் தமிழ்நாட்டு அரசினால் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக 1970 இலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

-  4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

Most Read