யூடியூப் கோர்னர்
Typography

இணையத்தில் ஒரு சிறந்த பகுதியும் உண்டு. உலகத்தை சிறப்பாக மாற்ற ஆர்வமுள்ள கனிந்த நல் உள்ளங்களுக்கு மேடை ஒன்றை வழங்குவதற்கான திறமையே அதுவாகும்.

அதுதான் நாராயண ரெட்டி எனும் தாத்தா ஒருவர் தனது யூடியூப் சேனலைத் தொடங்கியபோது, அவர் ஒளிபரப்பிய ஆரோக்கியமான தன்மையைப் மக்களிடையே பகிர்ந்து கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, "தாத்தா சமையலறை" எனும் பெயரில் இயங்கும் அவரது சேனலை பிந்தொடரும் 6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர் ஆச்சிரமங்களுக்கு உணவளிக்க பிரமாண்டமான உணவை சமைப்பதைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும், சமீபத்தில், இணையத்தின் அன்பான தாத்தாக்களில் ஒருவர் காலமானார் எனும் செய்தி துக்கத்தில் ஆழ்த்தியது.

சமையல் சேனல்களை மக்கள் எவ்வளவு நேசிக்காதவர் யாரும்ம இல்லை. இந்த தாத்தாவின் வீடியோ மக்களுக்குத் தேவையானதுதான் - எளிமையானது, எளிதானது மற்றும் அவர்கள் பெறக்கூடிய அளவுக்கு ஆரோக்கியமானது.

ஒவ்வொரு வீடியோவிலும் அவர் தயாரிக்கும் பிரமாண்ட உணவு அவரது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணம் உண்மையில், உணவு பெரிய அளவில் வாய்க்கு ருசியாக சமைக்கப்படும், இதனால் ரெட்டியின் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஆதரவோற்றோரும் ஒரு பிடியாவது சாப்பிடக்கிடைக்கிறது. இதுவே இரு வருடங்களுக்குள் 6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை அவரது சேனல் சம்பாதிக்கவைத்தது.

அதுமட்டுமல்ல கே.எஃப்.சி-பாணி சிக்கன், பீஸ்ஸா, லசாக், சிக்கன் பிரியாணி, டோனட்ஸ் மற்றும் பல உணவுகளை தயாரிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார் சமையல் தாத்தா.

தன் ஒவ்வொரு வீடியோ தொடக்கத்திலும் “அன்பு, அக்கறை, பகிர்வு: இதுதான் எனது குடும்பம் என்றே தொடங்குவாராம், வெறும் வார்த்தையாக இல்லாமல் அதையே வாழ்க்கையாக வாழ்ந்திருக்கிறார் இவர்.

ஆதரவற்றோருக்கு உதவுவதிலும், தனது சமூகத்தை ஆதரிப்பதிலும் அவர் உறுதியாக நம்பினார். அதனால்தான் அவரது வைரல் வீடியோக்களிலிருந்து அவர் பெற்றவைகள் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன,

அண்மையில் நாராயண ரெட்டி தாத்தா தனது 73ம் வயதில் காலமான செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. மறைந்தாலும் தாத்தா சமையலறையின் பணிகளும் நினைவுகளும் என்றும் நீங்காது தொடரும் என்கின்றனர்.

தாத்தா சமையலறை : Grandpa Kitchen

 

மூலம் : Boardpanda

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்