கோடம்பாக்கம் Corner
Typography

சென்னை வட்டார வழக்கில் ‘டர்’ என்ற ஒரு கொச்சை வார்த்தை உள்ளது. ‘டர்’ என்றால் நார், நாராகக் கிழிப்பது என்று பொருள். இப்போது நெட்டிசன்களால் ‘டர்’

ஆகியிருக்கிறார் திமுக எம்பியான தயாநிதி மாறன்.

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகள் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களையும் தயாரிப்பாளர்களையும் மிரட்டி இருக்கிறது.  ரஜினியை தன் வசமாக்கும் பாஜகவின் அரசியல் நடவடிக்கை இது என்று அரசியல் நோக்கர்களும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் விமர்சித்து வந்தனர். இதற்கிடையில் பாராளுமன்றத்தில் பேசிய திமுக எம்பியான தயாநிதிமாறன் “ரஜினிக்கு கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா? தமிழகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமானவரித்துறை. தமிழ்.. தமிழ்.. என பேசும் மத்திய அரசு, அதற்காக எதுவும் செய்யாமல், தொடர்ந்து சமஸ்கிருத மொழிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” என்று பேசியிருக்கிறார்.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை கூலாக எடுத்துக்கொள்ளாத நெட்டிசன்கள், ‘விஜய் ரசிகர்களின் ஓட்டு, ஒரு சதவீதமாவது திமுகவுக்கு விழாதா என்ற நப்பாசையில் இப்படி பேசி இருக்கிறார்’ என்றும், ‘மக்கள் பிரச்சனைகள் நிறைய இருக்கும்போது ரஜினி - விஜயைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதற்கா நாங்கள் உங்களுக்கு ஓட்டு போட்டோம்’ என்றும் கேட்டு தயாநிதி மாறனை நார் நாராக கிழித்து கொண்டிருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்