கோடம்பாக்கம் Corner
Typography

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் பறக்கும் விமானத்திலிருந்து நாளை வெளியிடப்படவுள்ளது.

பாடலை வெளியிடுவது யார் என்பது குறித்த தகவல் இப்போது கசிந்துள்ளது. படக்குழுவின் திட்டப்படி, சூர்யா மற்றும் 100 குழந்தைகள் விமானத்தில் பறந்து பாடலை வெளியிடுகின்றனர். உடன் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டோரும் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

சூர்யாவுடன் இது வரை எட்டியேப் பார்க்க்காத 100 ஏழைக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டு அரை மணி நேரம் சென்னையின் குறிப்பிட்ட பகுதி வரை அவர்களுக்க விமானத்தில் சுற்றிக் காட்டப்போகிறார்களாம். இந்த நிகழ்வில் வெய்யோன் சில்லி பாடலையும் வெளியிடுகிறார்களாம்.


குறைந்த விலையில் விமான சேவை அளிக்க நினைத்து ஏர் டெக்கானை தொடங்கிய கேப்டன் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் சுதா கொங்கரா. அவரின் ஆசை ஏழைகளுக்கும் விமான சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். அதை குறிப்பிடும்படியே, 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்