கோடம்பாக்கம் Corner
Typography

ஆர்யா திருமணத்துக்குப் பிறகே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் கூறும் அளவுக்கு ஆர்யாவும் விஷாலும் கோலிவுட்டில் உயிர் நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.

நான் கடவுள் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிறகு, தன்னைப்போலவே தனது நண்பன் விஷாலுக்கும் பிரேக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய ஆர்யா, இயக்குனர் பாலாவிடம் விஷாலை அழைத்துச் சென்றார்.  அவன் இவன் படத்தில் விஷாலை மாற்றுப் பாலின கூத்துக் கலைஞராக நடிக்க ஆர்யா காரணமாக இருந்தார். மேலும் அந்தப்படத்தில் ஆர்யாவும் அவருடன் இணைந்து நடித்தார்.

இந்நிலையில் விக்ரமை வைத்து இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார் இந்தப்படத்தில் நண்பன் விஷாலின் அழைப்பை ஏற்று ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.

தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விஷால். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது சொந்த தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் விஷால் அதில் வில்லனாக நடிக்க வரும்படி உத்தரவிட்டதை ஆர்யாவால் மறுக்க முடியவில்லையாம்.

சிம்பு, சூர்யா படங்களில் வில்லனாக நடிக்க அழைக்கப்பட்டபோது மறுத்த ஆர்யா. தற்போது நண்பனுக்காக ஓகே சொல்லிவிட்டார். நிஜவாழ்க்கையில் உயிர் நண்பர்களாக இருக்கும் விஷாலும் ஆர்யாவும் திரையில் எதிரும் புதிருமாக நடிக்க இருப்பதால் அதற்கேற்ப, திரைக்கதை எழுதி வருகிறாராம் ஆனந்த் சங்கர்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்