கோடம்பாக்கம் Corner
Typography

போலீஸ் வேடத்தில் நடிக்க நீ, நான் என்று ஆசைப்பட்ட நாயகர்கள் அத்தனை பேரும் தற்போது கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க விரும்புவது கோலிவுட்டில் தயாராகும் மாஸ் ஹீரோ படங்களில் இருந்தே தெரிகிறது. எதிர்பாராமல் கேங்ஸ்டர் ஆகிவிடும் வேடம் தனுஷுக்கு புதித்தல்ல.

ஆனால் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் இன்டர்நேஷனல் கேங்ஸ்டார் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு போன ஆண்டு வாஷிங்டனிலும் பின்னர் லண்டனிலும் நடந்தது. பின்னர் திருநெல்வேலியில் நடைப்பெற்று தற்போது சென்னை மாநகரத்தில் வெற்றிகரமாக நிறைவுப்பெற்றுள்ளதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டரில் சொல்லி இருக்கிறார்.
கூடவே இந்த படத்தின் முதல் தோற்றம் மற்றும் அசைவூட்டியை (மோஷன் போஸ்டர்) வரும் 19ஆம் தேதியன்று வயக்கம் பட நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் முதல் முறை கூட்டணி அமைத்திருக்கும்  இப்படத்தில் மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கேம் ஓவர் படத்தில் நடித்த சஞ்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் மாரி செல்வராஜின் கர்ணன் படத்திற்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதற்கிடையில் தனுஷ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு  மாரி செல்வராஜின் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நிறைவு பெறுமென்றும் தகவல் கிடைக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்