Wednesday, May 22nd

Last update09:31:08 AM

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! : நவராத்திரி ஸ்பெஷல் பதிவு

அம்மாவுக்கு சின்ன வயசிலிருந்தே ஒரு கண் சுத்தமாகத் தெரியாது.

இன்னொரு கண்ணில் வெறும் 5 சதவிகிதம்தான் பார்வை. அப்பா, அம்மா நல்ல ஆதர்ஷத் தம்பதி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து நடந்து கொள்வார்கள். அம்மா சமைக்கும் போது, அப்பா உதவி செய்வார். ஆனாலும் அம்மா நன்றாக சமைப்பார்கள். கண்பார்வைக் குறைவு என்றாலும், ஒரு நாள்கூட சமையலில் உப்புக்கு பதில் சர்க்கரை, சர்க்கரைக்கு பதில் உப்பு என்றெல்லாம் மாற்றிப் போட்டதில்லை.

அம்மாவின் சமையல் அத்தனை ருசியாக நேர்த்தியாக இருக்கும்" ,என்று தனது அம்மா பற்றி கூறுகிறார் சுரேந்தர். இவர் எஸ் ஆர் எம் கல்லூரியில் எம் ஏ ஜர்னலிசம் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சுரேந்தர் பேசுகையில், "எனக்காகவும் என் அக்காவுக்காக்கவுமே அம்மா அப்பா ஒரு பண்டிகையும் விட்டு வைத்ததில்லை. அத்தனை சந்தோசமாக பண்டிகை நாட்களைக் கொண்டாடுவோம். பண்டிகை நாட்களில் அம்மாவுக்கு நாங்கள் இருவருமே மிக உதவியாக இருப்போம். அப்பாவும் பாட்டியும் கூட அம்மாவுக்கு உதவி செய்வார்கள். அம்மா மிகத் தன்னம்பிக்கையுடன் அரசு வேலை பார்க்கிறார். இது எங்களுக்கு அம்மா தரும் தன்னம்பிக்கை என்று கூட சொல்லலாம். எந்த ஒரு விஷயத்துக்கும் இதுவரை நாங்கள் யாரும் சோர்ந்து போனதே கிடையாது, அந்த அளவுக்கு அம்மாவைப் பார்க்கும் போது எங்களுக்குள் புது ஆற்றலே ஊற்றெடுக்கும்.

எங்கள் வீட்டில் கொலு வைப்பது என்பதும் பாரம்பரியமாகவே கடைப் பிடிக்கப் பட்டு வரும் விஷயம். இந்த முறையும் எங்கள் வீட்டு கொலுவை நீங்களே பாருங்கள்.
என் அம்மா இதுவரை எங்களிடம் தனக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது என்று ஒருநாளும் குறைபட்டுக் கொண்டது கிடையாது. என் அம்மாதான் எனக்கு ரோல் மாடல்! அம்மா அடிக்கடி முணு முணுக்கும் பாடல் "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா". இந்த பாடலை மன நிறைவோடு பாட அம்மாவிற்கு எவ்வளவு பெரிய மனது இருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள் தெரியும்" என்கிறார் சுரேந்தர்.

நவராத்திரி சரஷ்வதி பூஜையை முன்னிட்டு அவர்கள் வீட்டில் வைத்துள்ள கொலுவை பாருங்கள். குறை ஒன்றும் இல்லை என்பது உங்களுக்கே புரியும்!

- 4தமிழ்மீடியாவுக்காக படங்களும், தொகுப்பும் : எழில் சூர்யா

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus