வேலுண்டு வினைதீர்க்க மயிலுண்டு எனைக்காக்க, என்று கந்தப்பெருமான் அழகிய தேர் ஏறி வீதி வலம் வரும் காட்சி காண ஆயிரம் கண் போதாது.
சமயம்
அருள் தரும் ஶ்ரீ வரலக்சுமி !
"நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அழித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே அருட் கடலே இமவான் பெற்ற கோமளமே"
ஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்
அகில லோகமாதவாக விளங்கும் அன்னை பராசக்தி இந்த ஆடிமாதத்தில் மானிடர்க்கு அருளை வாரிவழங்குவது பெரும் சிறப்பாகும்.
ஏனாதிநாத நாயனார்
திருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர்.
நல்லூர் நாயக தமிழன்
ஈழமணித்திருநாட்டின் வடபகுதியில் அமைந்திருக்கும் நல்லூர்ப் பதியிலே கோவில் கொண்டு வீற்றிருக்கும் எம் கந்தப்பெருமானின் திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. கொடியேற்றம் என்று சொல்லப்படும் (துவஜாரோகணம்) இன்று கொடியேற்றி கந்தனுக்கு விழா எடுக்கும் இந்து மக்களுக்கு எல்லாம் கந்தைனையும் அவன் கை வேலையும், கார்த்திகை நட்சத்திரத்தையும், சஸ்டி திதியையும் தெரியாது இருக்க வாய்ப்பில்லை.
இசைஞானியின் "பாருருவாய" : வரிகளும், அதன் அர்த்தமும்!
இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் "தாரை தப்பட்டை" திரைப்படத்திற்காக வெளிவந்திருக்கும் "பாருருவாய" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல. இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.
அமாவாசையின் பூரணை நிலவு
உலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.