சமயம்
Typography

தர்மம் சிறப்பாக நடைபெறுகின்ற காலம் இம்மார்கழி மாதம் ஆகும்.. அதாவது ஜோதிட சாத்திரத்தில் ராசி அடிப்படையாகக் கொண்ட தனுசு ராசிக்கு உரிய மாதமாகையால் தனுர் மாதம் என்றும் மார்கழியை சிறப்பிப்பர்.

ஆக இம்மாதம் இந்துக்களுக்களின் காத்தல் தெய்வம் கிருஸ்ண பரமாத்மாவுக்கு மிகப் பிடித்தமாதம் ஆகும்.

அடுத்து கிறிஸ்தவர்களின் ஜேசுகிறிஸ்துநாதர் அவதரித்த நாள் நத்தார் பண்டிகை கொண்டாடும் நாள் இம் மார்கழி மாதம். இப்படி அநேக மதங்களும் கொண்டாடும் மார்கழி தர்மம் செய்ய ஏற்றவாறு காலச்சூழல்களும் அமைந்திருக்கும். பனியும், குளிரும்,மழையும், பூமியைப் போர்த்த வண்ணம் ஜில்லென்ற குளிர் காற்றில் விறைத்திருக்கும். அச்சமயம் நத்தார் தாத்தா பரிசுப்பொதிகளை சுமந்து குழந்தைகளுக்கு பரிசு தருவார். அதன் மூலம் இரந்து கொடுக்கும் தர்ம சிந்தனையை எல்லோர் மனதிலும் வளர்ப்பார். தெய்வ சக்தி கிடைக்க அருள் கீதங்கள் மாதா கோவில்களில் எல்லோரும் வணங்கி இணைந்து பாடுவார்.கள்.கூட்டு வழிபாடு பஜனை பாடல்கள் பாடுவது என்பது அனைத்து மதத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மார்கழி மாதத்தில் அதிகமாக இந்துமதத்தில் சிவனை நினைந்தும் விஸ்ணுவை நினைந்தும் பக்த அடியார்கள் கூடி அதிகாலை வேளையில் திருப்பள்ளிஎழுச்சி பாடி ஊர்கள் தோறும் செல்வர்.

அவர்கள் பாடல்களை கேட்டு நித்திரை விட்டு எழுந்து குளித்துதூய ஆடை அணிந்து தீருநீறுபூசி இறைவனை வழிபட ஆலயம் செல்வர். வீடுகளில் பஜன் செய்து வருபவர்க்கு சூடானகோப்பி தேநீர் உணவுப்பண்டங்கள் உண்ணக் கொடுத்து அவர்களுடன் ஆலயம் செல்வர். அதிகாலையில் இறைவனுக்கு நடக்கும் பூஜை ஆராதனைகளில் பங்கு கொண்டு திருவாசகம் திருவெம்பாவை பாடி இறைவனை வாழ்த்தி வணங்குவர்.

காலை மாலை வேளைகளில்சுவாமி ஐயப்பன் பூஜைகளில் பங்குபற்றி கூட்டுவழிபாட்டில் கலந்து கொண்டு அன்னதானம் செய்வார்கள். இருப்பவர் இல்லாதவர்க்கு உண்ணக்கொடுத்து தர்ம சிந்தனையைவளர்ப்பர். காருண்ய மிக்கவராய் ஒற்றுமையாக வாழ்வதற்கு. ஏற்புடையதாய் அந்நாளில் முன்னோர்கள் அனைத்து சமய நெறிகளிலும் விரத அனுட்டானங்களையும் சீரான பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.,ஐம் புலன்களை அடக்கி எம் கட்டுக்கோப்பில் நாம் வைத்திருக்க நல்மத துணை அவசியமாகும்.

மார்கழி மாதத்தில் இந்துக்கள் முக்கியமாக அதிகாலையில் எழுந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவெம்பாவை பூஜையில் வழிபாடாற்றுவது சிறப்பாகும்.சிவனை நினைந்து திருவெம்பாவை பூஜைகளில் கலந்து மணிவாசகரின் திருப்பள்ளி எழுச்சி படித்து இறைவரை துயில் எழுப்புவர்.பின்பு திருமஞ்சனம் ஆட்டி அதாவது அபிசேகம் செய்து பட்டு உடுத்தி பூமாலை சாற்றி சந்தன குங்கும அலங்காரம் செய்வர்.அதன் பின் அருள்சக்தி தரும் தெய்வங்களுக்கு தூபதீபங்கள் காட்டி மலர்களால் அர்ச்சிப்பர்.பின்னர் வேதஸ்தோத்திரங்கள் வேதியர் [குருவானவர்] உரைத்து மங்கல வாத்தியம் ஒலிக்க பூஜை ஆராதனை செய்வர்.

பின்பு திருவெம்பாவை பாடல்கள் பாடி ஆராதித்து வணங்குவர்.. நிறைவாக இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்கள் அடியவர்க்கு விநியோகிப்பர். ஆலயம் செல்லும் உயிர்களின் மனம் ஆன்மா லயிக்கின்ற இடமாக இறைபக்தியில் மூழ்கி அருட் பிரசாதத்தால் மனநிறைவும் [அன்னம்] பொருட்பிரசாதத்தால் வயிறு நிறைவும் அடைகின்றனர். மனிதர்க்கு மனமும் உடலும் நிறைவடையும் போது அமைதி அடைகின்றனர்..அமைதி இல்லாவிட்டால் கொதிப்பு நிலை உருவாகும், ஆத்திரம்,வன்மம் ஏற்பட்டு என்ன செய்கிறோம் என்பதை மறந்து, தூய
மனதை அழுக்கடையச் செய்து ஒருகட்டுப்பாடில்லாமல் நிலைகுலைய வைத்து விடும்.

அதனால் நாம் அடைவது தீமையே அன்றி நன்மை எதுவும் இல்லை. அன்பு கருணை தயாளகுணம் எப்போதும் நிறைந்தே இருக்க வேண்டும். அதனையே புத்தரும், ஜேசுவும், நபியும்,கிஸ்ணரும் ஆதிசங்கரரும் இப்படி அவதார புருசர்களாக அவதரித்தவர்கள் அனைவரும் உலகிற்கு உணர்த்தினர். நன்மைதீமை கலந்த இவ்வுலகில் நல்லவர் கெட்டவர் என இருபாலாரும் இருப்பர். நற்குணமுள்ள தேவரும், கெட்ட குணம் நிறைந்த அசுரரும் மேலுலகில் வாழ்கின்றனர். அவர்களுக்குள் கருத்து முரன் பாடு எப்போதும் இருந்த வண்ணமேஇருக்கும்.

அதனால் இருவருக்கும் போட்டி மனப்பாண்மை காரணமாக ஒருவரை ஒருவர் எதிர்த்து வெற்றி கொள்வதிலேயே குறிக்கோளாய்
இருப்பர். அதற்காக தமக்கு மேலான தெய்வங்களிடம் அசுரர் தேவர்களை அழிக்க முடிவெடுத்து கடும் விரதங்களை மேற்கொள்வர். விரதத்தை கடுமையாக்கி இருப்பதை பார்த்த இரக்கமிகுந்த தெய்வங்களும் வரத்தை வாரி வழங்கி விடுவர். எந்த வரத்தை எவனுக்கு எப்படிக் கொடுத்தால் பூவுலக மக்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்பதும் அந்த இறைவர்க்கு நன்றாகத் தெரியும்.

சிவன் ஜோதி மயமானவர் பஸ்மம் என்றும் விபூதி என்றும். அழைக்கப்படும் திருநீற்றை [சாம்பல்] அதை உடலில் பூசுபவர் ,அவருக்கு ஆக்கமும்
கிடையாது அழிவும் கிடையாது, அப்பேற்பட்ட ஈசன் பத்மாசுரன் எனும் அரக்கனின் வரத்திற்கு மெச்சி வரத்தை கொடுத்து விடுகிறார். அவன் கேட்ட வரத்தால் எல்லாரையும் அழித்து விடலாம் என அவன் நினைத்து அகந்தையுற்றான்.அவன் யார் தலையில் கைவைத்தாலும் பஸ்மம் தான். அப்படி ஒரு வரத்தைப் பெற்றிருந்தான். பெற்றவரத்தை தந்தசிவனிடமே சோதித்துப் பார்க்க அவர் தலையில் கை வைக்கப் பார்த்தான்.

சிவனார் திருவிளையாடல் ஆரம்பமாகியது. ஆட்டுவிக்கும் தில்லையம்பலக்கூத்தன் சிவன் ஆட்டத்தை விட்டு எடுத்தார் ஓட்டம் ஓடி காத்தற்கடவுள் விஸ்ணுவிடம்.பஸ்மாசுரன் வரம் பற்றிக் கூறி சிவலிங்கவடிவம் பெற்று ஒருபூவில் ஒழிந்து கொண்டார். விஸ்ணு பிரானும் லீலைகள் புரிபவராயிற்றே அவர்மோகினி வடிவில் பத்மாசுரனை மயக்கி நடனம் புரியலானார். அவன் தன்னை திருமணம் செய்யும் படிவற்புறுத்துகிறான். அதை மோகினி வடிவில் இருந்த விஸ்ணுவும் மாயப்புன்னகை புரிந்து மணம் புரிவதென்றால் இக்குளத்தில் நீராடி புனிதமாகி சந்தியாவந்தனம் செய்து விஸ்ணு நாமங்களை ஜெபித்து திருநீறு பூசி வணங்க வேண்டும்.

என்று கூறியதும் அவனும் குளத்தில் நீராடி அதன்பின் சந்தியாவந்தனம் செய்து விஸ்ணு நாமங்களை கூறியவாறு தலையில்
கைவைக்க அப்படியே எரிந்து பஸ்மாகினான். மோகினி வடிவம் எடுத்த விஸ்ணு மாயாவின் அழகில் சிவனே மயங்கி விட்டான். சிலிங்கப்பூவில் ஒழிந்திருந்த சிவன் வெளியே வந்த போது அவரை மாயை தொற்றிக் கொள்ள பந்தளத்து மகாராஜாவின் தவத்திற்கு வழி பிறக்கலாயிற்று. மோகினிவிஸ்ணுக்கும்,சிவனுக்கும் அவதரித்த குழந்தை மணிகண்டனாக ,ஹரி ஹர புத்திரனாக ,சாஸ்தாவாக பலநாமங்கள் சிறப்புடையவராக இப்பூமியில் பிறந்தார்.

பின்னர் பந்தளத்து மன்னரால் வளர்க்கப் பட்டார். அவரும் தாயின் நோய் தீர்க்க புலிப்பால் கொண்டுவந்து கொடுத்து நோய் தீர்த்தார். தனது கடமைகள் முடிந்ததும் சபரி மலை வீற்றிருந்து மகரஜோதி தரிசனம் செய்ய வருபவர்க்கும் பதினெட்டுப்படி ஏறிவருபவர்க்கும் சபரிபீடத்தில் வீற்றிருந்து சற்குருநாதனாக அருள் காட்சி தருகிறார். நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைதீர்ப்பு. தர்மங்கள் தோற்பதில்லை. நியாயங்கள் பொய்ப்பதில்லை.

நன்றி,

4தமிழ்மீடியாவுக்காக அருந்தா

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்