சமயம்
Typography

ஶ்ரீ இராமபிரான் திருமாலின் தசவதாரத்தில் ஒரு அவதாரமாகத்தோன்றியவர். அந்நாள் நவமித்திதி எனும் படியாதலால் இராமநவமி ஆக போற்றப்படுகிறது.

இந்துக்களாலும் பெரும்பாலும் வைஸ்ணவர்களாலும் இராமரைத் துதிக்கும் நாளாக உலகெங்கும் வழிபடப்படுகிறது. இந்நாள் ஒரு பொன்னாள். வாழ்ந்து காட்டினான் இராமன், மானிடர் எப்படி வாழ்க்கையை கொண்டு செலுத்திட வேண்டும். வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள், இன்ப துன்பங்கள், ஏற்ற, இறக்கங்கள் ,கூடல், ஊடல், சேர்தல், பிரிதல் இப்படி பலவகையான வாழ்க்கை நிலைகளை கடந்து வாழ்ந்தாக வேண்டும், இப்படி தருணங்களில் எப்படி வாழ்க்கையை நகர்த்த வேண்டும், ஒருவனுக்கு ஒருத்தியாக, கற்பின் கனல் சீதையுடன் இராமன் வாழ்ந்திருந்தான். வால்மீகி முனிவரின் இராமயணம் எனும் புராணநூல் அவர்களின் பண்பட்ட வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இராமருக்கு முன் கிருஸ்ணராக அவதரித்ததும், விஸ்ணு பெருமானே, நாராயணர், வெங்கடேசர், ஹரி, பலராமர் புருஹோத்தமர், பெருமாள் இப்படி இன்னும் பல நாமங்கள் எடுத்த போதும், ஶ்ரீ இராமர் எனும் இந்த அவதாரமே மிகவும் தெய்வீகமாக மக்கள் மனங்களில் பதியப்பட்டுள்ளது. இராமர் சத்தியம் தவறாது வாழ்ந்தவர், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, என்பதற்கு ஏற்ப தசரதமன்னனாகிய தந்தை கைகேகியாகிய தாய் கூறிய வாக்கைக் காப்பாற்ற அரசாளாது பதினான்கு வருடம் காடாளச் செல்கிறான். நாடாள வேண்டிய மூத்த பிள்ளை தம்பி பரதனை நாடாளச் சொல்லி விட்டு தந்தையை தாயை ஊர்மக்களைப் பிரிந்து மனைவியுடனும் தம்பி இலட்சுமனுடனும் காட்டுக்குப் போகிறான். எப்படி முடியும். மனம் அதுவே மார்க்கமாகியது, அவன் ஆளாவில்லை, என்ன நடந்தது,

பிரிவு தாளாமல் தந்தை உயிர் துறந்தார். பரதன் வந்து அயோத்தி நகரை பார்த்தான்,சோகம் மூழ்கியிருந்தது.பரதன் அண்ணன் இராமன் உயிராயிற்றே. அவரை அழைத்துக் கொண்டு வந்து நாட்டை ஆளவைக்க பெரிதும் முயற்சி செய்கிறான். கொடுத்த வாக்கு மீறமுடியாது இராமன் முடி ஆள மறுக்கிறான். சரி உன் பாதுகையை கொடுஅண்ணா என்று அவன் பாதத்தில் வீழ்கிறான். இராமர் பாதுகையை கொடுக்க அதை தன் தலைமேல் சூட்டி அயோத்தி நகர் சென்று பாதுகைக்கு பட்டாபிசேகம் செய்து நாட்டை கவனிக்கின்றான். பதினான்கு வருடம் நாடாள்கிறது இராமர் பாதுகை. சகோதர ஒற்றுமை பலப்படுகிறது.

தொடரும்...

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்