கன்னி: புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே !

இந்த ஆண்டு அயராது பாடுபடும் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பங்காளிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். சமுதாய விழாக்களில் பங்கேற்பீர்கள். மற்றபடி எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பிறர் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்வீர்கள்.

Read more: 2019 - கன்னி ராசிக்கான பலன்கள்

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே !

இந்த ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

Read more: 2019 - சிம்ம ராசிக்கான பலன்கள்

மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே !

இந்த ஆண்டு அனைத்து விஷயங்களிலும் இருந்த தொய்வு நிலை மாறும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். உங்களின் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.

Read more: 2019 - மிதுன ராசிக்கான பலன்கள்

மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே !

இந்த வருடத்தில் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.

Read more: 2019 - மேஷ ராசிக்கான பலன்கள்

கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே !

இந்த ஆண்டு ராசியைப் பார்க்கும் குரு பகவான் செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும்.

Read more: 2019 - கடக ராசிக்கான பலன்கள்

ரிஷபம்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே !

இந்த ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். அதேநேரம் வேறு பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. மார்ச்சு மாதம் அதிசாரமாக மாறும் குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள்.

Read more: 2019 - ரிஷப ராசிக்கான பலன்கள்

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு மார்கழி மாதம் 17ம் தேதி முன்னிரவு - (1.1.2019) கிருஷ்ணபக்ஷ தசமியும் ஸ்வாதி நக்ஷத்ரமும் சுக நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2019 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

Read more: எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2019ம் புத்தாண்டு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்