எந்த ஒரு வேலையையும் தானாக எடுத்து செய்யும் திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே நீங்கள் தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடையவர்கள். எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டீர்கள். நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள்.

எந்த காரியத்திலும் ஒரே மனதாக ஈடுபடும் மகர ராசி அன்பர்களே நீங்கள் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். உங்களது தன்னம்பிக்கையால் வளர்ச்சி காண்பீர்கள்.

எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் சகோதரகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள். வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிப்பவர். எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உடையவர். நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

எந்த காரியத்திலும் தனது உழைப்பினை உலகிற்கு பறைசாற்றும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பர்களே நீங்கள் அம்மான்கிரகம் என்று அழைக்கப்படும் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். 

எதிலும் நேர்மையையும் விவேகத்தையும் கடைபிடிக்கும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் தேவ குரு என்று அழைக்கப்படும் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றும் திறன் உடையவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருப்பவர்கள்.

அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் துலா ராசி அன்பர்களே நீங்கள் களத்திர காரகன் அழைக்கப்படும் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர்.

நடையில் மிடுக்கும் தோரணையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

More Articles ...

Most Read