ஜோதிடம்
Typography

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
எந்த ஒரு வேலையையும் தானாக எடுத்து செய்யும் திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே நீங்கள் தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடையவர்கள். எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டீர்கள். நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள்.

கிரகமாற்றங்கள்:
விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.
கிரகங்களின் பார்வைகள்:
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: தைரிய வீர்ய ஸ்தானம் - ராசி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம்.

பலன்கள்:
இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தன்னைத்தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்:
உங்கள் ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ பகவான் சஞ்சரிக்கிறார். கேது பகவான் ஏழாம் பார்வையாக பார்க்கிறார். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். சளி தொந்தரவு, மூச்சுப் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். அதற்கேற்றார் போல் உங்கள் உணவு பழக்கத்தை பார்த்துக் கொள்வது அவசியம். வெயில் காலம் என்று குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். மூச்சுப் பயிற்சிகள் உங்களுக்கு கைகொடுக்கும்.

குடும்பம்/உறவுகள்
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சந்தாண பாக்கியம் கிட்டும்.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்
குழந்தைகள் விஷயங்களில் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

சேமிப்பு, முதலீடு, பொருளாதாரம்:
உங்கள் தன வாக்கு குடும்ப ஸ்தானதிபதி குருவின் பார்வை தனஸ்தானத்தில் மீது விழுகிறது. மேலும் தனஸ்தானத்தை புத பகவான் அலங்கரிக்கிறார். அனைத்து கிரக அமைப்புகளும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. எனவே லாபம் தரும் முதலீடுகளைச் செய்தால் வெற்றி நிச்சயம். உண்மையான உழைப்பு உங்களுக்கு பொருள் சேர்க்கையை பெற்றுத் தரும். பங்கு வர்த்தகங்களிலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். அதிக சேமிப்புகளை செய்து கொள்ளுங்கள். உங்களின் நல்ல காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

வம்பு / வழக்குகள்:
உங்களுடைய ராசியினை சனி பகவான் பார்க்கிறார். எதிலும் தொய்வு நிலை ஏற்படலாம். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். உங்கள் பக்கம் உள்ள நியாயம் தீர்ப்பாகும்.

நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம்
புரட்டாசி மாதம் வரையுள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களில் நன்மையே நடக்கும். அதன் பின் உள்ள காலகட்டத்தில் தொழில் சார்ந்த விஷயங்களில் சிறிது தொய்வு ஏற்படலாம்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த ஆண்டு பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

சதயம்:
இந்த ஆண்டு எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த ஆண்டு உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் கம் கணபதயே நம என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS