ஜோதிடம்
Typography

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் சகோதரகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள். வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிப்பவர். எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உடையவர். நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

கிரகமாற்றங்கள்:
விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.
கிரகங்களின் பார்வைகள்:
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: ரண ருண ரோக ஸ்தானம் - சுக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம்.

பலன்கள்:
இந்த ஆண்டு மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

உடல் ஆரோக்கியம்:
இந்த புத்தாண்டு தொடக்கத்தில், உங்கள் ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சிறு சிறு தொந்தரவுகள் இருக்குமேயன்றி பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. சூடு காரணமாக தோல் சம்பந்தமான தொந்தரவுகளும், அரிப்பு, அலர்ஜி போன்றவை வர வாய்ப்பு உள்ளதால் உங்கள் உடல் நிலையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

குடும்பம்/உறவுகள்:
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
உங்களுடைய மாங்கல்ய ஸ்தானத்தை குரு பகவான் பார்த்து அருள் செய்வதால் நினைத்தபடி மாங்கல்யம் பாக்கியம் கிட்டும். குழந்தை பெறும் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பொற்செய்தி ஒன்று வரும்.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்:
ஐந்தாமிடத்து அதிபதி விரையஸ்தானத்தை அலங்கரிப்பதால் குழந்தைகளுக்காக அதிகமாக செலவு செய்ய வேண்டியதிருக்கும். அவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். அதிக சிரத்தை எடுத்து காரியங்களை செய்ய சொல்வது நல்லது.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு:
தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
கணவர் தான் எடுக்கும் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். ஆனாலும் பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும்.

சேமிப்பு, முதலீடு, பொருளாதாரம்:
உங்களுடைய தனஸ்தானத்தில் செவ்வாய், சனி இருந்தாலும் உங்களுடைய சுகஸ்தானத்தை குரு பார்க்கிறார். புதிய முதலீடுகள் செய்யும் போது அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை பெற்று செய்வது நலம் தரும். உங்களுடைய சேமிப்புகள் எந்த பிரச்சனையுமின்றி வளர குரு அருள் செய்வார். புதிய முதலீடுகளில் சனியின் சஞ்சாரத்தால் தாமதப்பட்டாலும், குருவின் பார்வயால் அவை நல்ல முறையில் நடக்கும். கவலை வேண்டாம்.

வம்பு / வழக்குகள்:
தனவாக்கு ஸ்தானத்தை சனி அலங்கரிப்பதால் முடிந்தவரை வார்த்தைகளை கோர்ர்த்து போட்டு பேசுவது நன்மை தரும். உங்களால் முடிந்தால் மட்டும் காரியங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் கெட்ட பெயர் சம்பாதிக்க நேரிடலாம். வீண் விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பது நன்மை தரும்.

நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் :
புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டங்களில் எந்த முடிவு எடுத்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அதன் பின்னான காலகட்டத்தில் பல வித யோகங்கள் உங்களுக்கு வந்து சேரும்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த ஆண்டு எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

அனுஷம்:
இந்த ஆண்டு தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

கேட்டை:
இந்த ஆண்டு எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை தினமும் 18 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்