ஜோதிடம்
Typography

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்த சூழ்நிலையிலும் கலங்காத மனம் கொண்ட மீன ராசியினரே இந்த ஆண்டு ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு - சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியில் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் காலகட்டம் இது.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும்.

பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். அரசியல் துறையினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.  மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த ஆண்டு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.கடன்கள் குறையும்.
உத்திரட்டாதி:
இந்த ஆண்டு பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள்யாவும் பூர்த்தியாகும்.
ரேவதி:
இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்