ஜோதிடம்
Typography

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கடின உழைப்பும், தொழில் உயர்வும் பெற்ற கும்பராசியினரே இந்த ஆண்டு பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.  கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சனியின் சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.  மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது.
சதயம்:
இந்த ஆண்டு செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும.; சற்றே அலைச்சல்கள், சுகவாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்