முற்றம்
Typography

1983 கறுப்பு ஜூலை கலவரம் குறித்து இலங்கைத் தமிழர்கள்/சிங்களவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கறைபடிந்த ஞாபகம் இருக்கும்.

இக்கலவரத்தின் 34 வது வருட நினைவுகள் இந்த வாரம் (ஜூஐ 25-29), இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழர்களால் மீட்கப்படுகின்றன. இலங்கையின் மாற்று ஊடகங்களில் ஒன்றான Ground View இணையத்தளத்தில், கடந்த 2013ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் குறித்து வெளியிடப்பட்ட ஞாபகங்கள் பதிவொன்றை தற்செயலாக காணக்கிடைத்தது.

இக்காணொளி/லி காட்சிகள் வெளியிடப்பட்டு இற்றைக்கு நான்கு வருடங்கள் கடந்து விட்ட போதும், அந்த ஞாபகங்கள் இன்றைக்கும் பகிர்ந்து கொள்ளத் தேவை உள்ளதாகவே இருக்கின்றன. அவ்வருடத்தில் அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள், அவர்களுடைய பிள்ளைகள், எழுத்தாளர்கள், மாற்றுச்சிந்தனையாளர்களின் பார்வையில் இக்கலவரம் என பல்வேறு கோணங்களில் அந்த ஞாபகங்கள் மீட்கப்படுகின்றன.  

இக் ணொளிகளை உருவாக்கிய பி.விஜயதாசன் மற்றும் தனுஜா துரைராஜா ஆகியோருக்கான நன்றிகளுடன் இங்கு இணைத்து கொள்கிறேன்.

 

நன்றி : http://30yearsago.asia/

 

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

 

 

Most Read